தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு.

Total Views : 12
Zoom In Zoom Out Read Later Print

இறுதிப்போரின் முடிவில், 2009 மே மாதத்துடன் தாயகத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக அலகுகள் யாவும் ஒரு முடக்க நிலைக்குள் சென்றிருந்த நிலையில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களினதும் இறுதிப்போரில் வீரகாவியமான மாவீரர்களினதும் வீரச்சாவுகள் உறுதிப்படுத்தப்படுவதிலும் அறிவிக்கப்படுவதிலும் வீரவணக்க நிகழ்வுகள் நடத்தப்பெறுவதிலும் தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டிருந்தது என்பது யாவரும் அறிந்ததே.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு

இறுதிப்போரின் முடிவில்,
 2009 மே மாதத்துடன் தாயகத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக அலகுகள் யாவும் ஒரு முடக்க நிலைக்குள் சென்றிருந்த நிலையில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களினதும் இறுதிப்போரில் வீரகாவியமான மாவீரர்களினதும் வீரச்சாவுகள் உறுதிப்படுத்தப்படுவதிலும் அறிவிக்கப்படுவதிலும் வீரவணக்க நிகழ்வுகள் நடத்தப்பெறுவதிலும் தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டிருந்தது என்பது யாவரும் அறிந்ததே.

இவ்வாறான நிலையில் இறுதிப்போரின் பின்னர் புலம்பெயர் தேசங்களுக்கு குடிபெயர்ந்த முன்னாள் போராளிகளின் பெரு முயற்சியில் தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் தேசத்தையும் தேசியத் தலைவனையும் நேசிக்கும் மக்கள்  ஆகியோரின் பங்களிப்பின் விளைவாக 2016 ஆம் ஆண்டிலிருந்து இறுதிப் போர்க்களங்களில் வீரகாவியமான மாவீரர்கள் பெயர்கள் பகுதி பகுதியாக அறிவிக்கப்பட்டு வீரவணக்க நிகழ்வுகள் இயக்க மரபிற்கு அமைய நடைபெற்று வருகின்றன. 

அதன் தொடர்ச்சியாக எங்கள் வரலாற்றுத் தலைவனின் வீரமும் தியாகமும் நிறைந்த இறுதிக்கணங்கள் பதிவாக்கப்பட்டு, அவரது உண்மை வரலாறும் உரைக்கப்பட வேண்டும் என்ற வகையில் உலகெங்கும் பரந்து வாழும் முன்னாள்  போராளிகள் ஒன்றிணைந்து மேதகு. வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம் என்ற அமைப்பை உருவாக்கி, தலைவர் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த வரலாற்றுக் கடமைக்காக  உலகெங்கும் பரந்து வாழும் முன்னாள் போராளிகள், தேசிய செயற்பாட்டாளர்கள், தமிழ்த் தேசிய அமைப்புகள், மக்கள் அடங்கலாக அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வு எதிர்வரும் 02.08.2025 அன்று சுவிற்சர்லாந்து நாட்டில் விடுதலைப் புலிகளின் முழுமையான இயக்க மரபுகளுக்கு அமைய மிகவும் உணர்வுபூர்வமாகவும் பேரெழுச்சியாகவும் நடைபெறவுள்ளது.

எம் அன்பிற்குரிய உறவுகளே!
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு தங்களின் தேசியக் கடமையை நிறைவேற்றுமாறு வேண்டுகிறோம். 

அந்த வகையில் குறித்த நாளில் (02.08.2025) வேறு நிகழ்வுகளைத் தவிர்த்துக் கொள்வதுடன், அன்றைய நாள் நிகழ்விற்குச் செல்வதற்கான முன்னேற்பாடுகளை தாமதிக்காது, இன்றே செய்து கொள்வோம்.

குறிப்பு: நிகழ்வு நடைபெறும் இடத்தின் முகவரி உரிய காலத்தில் அறியத்தரப்படும்.

தமிழனாக நாம் ஒவ்வொருவரும் நமது தேசியக் கடமைக்குத் தயாராவோம்.
"நன்றி"


மேலும்...

அன்மைய பதிவேற்றல்...