இனத்தின் தாயுமானவரும் அவர்தான்..

Total Views : 70
Zoom In Zoom Out Read Later Print

தம்பி என்றுதான் பலர் அவரை அழைத்தார்கள். ஆனால் இனத்தின் இறையாக அவர் இருந்த கதை உலகம் இதுவரை கண்டிராத வரலாறு. சாதிகளாலும், சமயச்சச்சரவுகளாலும், பொருளாதார சிக்கல்களாலும் நிறைந்திருந்த ஒரு சமூகத்தில் பிறப்பெடுத்த மனிதன் சுயநலமாக வாழ்ந்துவிட்டுப்போக ஆயிரம் வழிகள் இருந்தது.

அந்த ஆயிரம் வழிகளையும் இனத்தின்விடுதலை என்னும் ஒற்றைச்சொல் புறம்தள்ள வைத்தது.

வாழ்வின் இறுதிநொடிவரை சமரசம் செய்யாத, இந்த பூமிப்பந்தின் மிகப்பெரும் விடுதலைவீரனாக வரலாறு அவரை அரவணைத்துக்கொண்டது.
தன் வாழ்வுமுழுவதையுமே இனத்திற்காக அர்ப்பணிக்கும் மாந்தர்களை பூமித்தாய் பல நூற்றாண்டுகளிற்கு ஒருதடவைதான் பிரசவிப்பாள்.
நிரந்தரமற்ற வதிவிடம், ஒழுங்கற்ற உணவு, தூக்கமற்ற இரவுகள் என இந்தமனிதன் வாழ்ந்த வாழ்க்கையின்பின்னால் இனத்தின் விடுதலை என்னும் இலட்சியம் மட்டுமே ஓங்கி நின்றது.
மிரட்டிப்பார்த்தார்கள்,
துரோகிகளை ஏவிப்பார்த்தார்கள்,
ஆசைகாட்டிப்பார்த்தார்கள்,
எதற்கும் அசையாத ராஜகோபுரமாக வாழ்த்த ஒரு மனிதனின் இனத்தில் நாம் பிறந்ததென்பதே பெரும்பாக்கியம் எனக்கொள்க.
எண்ணற்ற போர்வல்லுனர்கள், ராஜதந்திரம் மிக்க தலைவர்கள் , படைத்துறை விற்பன்னர்கள் என அனைவரையும் ஒற்றைமனிதனாக தன் தோழர்களுடன் எதிர்த்து நின்ற ஒருவரை பெற்ற இனமாக தமிழினம் பெருமிதம் கொள்கின்றது.
ஒப்பற்ற பெரும் தலைவன் எம் தலைவன்.
அவரை எங்கும் தேடாதீர்கள்.
விடுதலையினை நேசிக்கும் இனங்களின் மூச்சு அவர்.
தான் நேசித்த மக்களின் சுதந்திரவாழ்விற்காய் வானத்தில் பெரும் நட்சத்திரமாக அவர் ஒளிவீசிக்கொண்டிருக்கின்றார்.
அவர் கற்றுத்தந்த வித்தைகள் எமதினத்தின் விடுதலையினை நிச்சயம் ஒருநாள் பெற்றுத்தரும்.
இனத்தின் இறை அவர்.
இனத்தின் தாயுமானவரும் அவர்தான்..

மேலும்...

அன்மைய பதிவேற்றல்...