தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு அறிவிப்பு நாளை உத்தியோக பூர்வமாக வெளியாகின்றது.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு அறிவிப்பு நாளை உத்தியோக பூர்வமாக வெளியாகின்றது.





தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவிப்பு நாளை உத்தியோக பூர்வமாக வெளியாகின்றது.
கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாட்டில், தேசியத் தலைவரின் வழிநின்று களமாடிய போராளிகள், தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்த ஒன்றுகூடலில், தலைவர் அவர்களின் வீரச்சாவினை உறுதிப்படுத்தி வெளியிடப்பெற்ற தமிழீழ மாவீரர் பணிமனையின் அறிவிப்பு, நாளை 10.03.2025 அன்று உத்தியோகபூர்வமாக வெளிவருகின்றது.
தலைவர் அவர்களின் வீரச்சாவினை உறுதிப்படுத்தும் அறிவிப்பானது காணொளிப் பதிவாகவும் அதேவேளை, அறிக்கை வடிவிலும் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இத்தகவலை மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின் ஊடகப் பிரிவு அனைவருக்கும் அறியத்தருகின்றது.
ஊடகப்பிரிவு,
மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்.
09.03.2025.