தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வுகளின் முழுமையான காணொளித் தொகுப்பு - 2026.

உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு 31.05.2026
தமிழரின் தேசிய சுதந்திர இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் கட்டியெழுப்பி, ஒப்பற்ற ஆயுதப் போரியல் பாதையில் முப்படைகளையும், இறையாண்மை மிக்க அரசிற்கான நிர்வாகக் கட்டமைப்புகளையும் உருவாக்கி, நடைமுறைத் தமிழீழ அரசை நிறுவிய வரலாற்று நாயகன், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு 31.05.2026, இன்று சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரிலுள்ள Schulhausstrasse 12, 8182 Hochfelden என்ற இடத்தில், மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின் ஒழுங்குபடுத்தலில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
இந்நிகழ்வு, போராளி திரு. அறிவு அவர்கள் தலைமையில் பொதுச் சுடரேற்றல் மற்றும் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் முற்பகல் 11.00 மணிக்குத் தொடங்கியது.
பொதுச் சுடரினை ஈழநாதம் பத்திரிகையின் வெள்ளிநாதம் இதழின் ஆசிரியரும் இரண்டு மாவீரர்களின் சகோதரருமான திரு. சிறி. இந்திரகுமார் அவர்கள், மாவீரர் லெப்ரினன்ட் கலையரசனின் தாயார் திருமதி. வேலாயுதம்பிள்ளை புவனேஸ்வரி அவர்கள், செயற்பாட்டாளர்கள் திரு. நடராசா புகழன், திரு. தில்லையம்பலம் சிறிகுமார், திரு. பாலசுப்பிரமணியம் விஜயகுமரன் மற்றும் போராளி திருமதி. பூங்குழலி ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
தமிழீழத் தேசியக் கொடியினை மாவீரர் வீரவேங்கை றொசானியின் சகோதரன் போராளி திரு. மேனன் அவர்கள் ஏற்றினார்.
மாவீரர் பொதுத் திருவுருவப் படத்துக்கு போராளி திரு. வினோத் சுடரேற்ற,  திருமதி. சுசி ஜெயந்தன் மலர்மாலை அணிவித்தார்.
தமிழீழத் தேசியத் தலைவரின் திருவுருவப் படத்திற்கான ஈகைச்சடரினை போராளி திரு. மாறன் ஏற்ற, மலர்மாலையை மாவீரர் கப்டன் உதயனின் சகோதரி போராளி திருமதி. கமலினி அணிவித்தார்.
அடுத்து அகவணக்கம் இடம்பெற்றது. அகவணக்கத்தினைத் தொடர்ந்து மலர்வணக்கத்தினை திருமதி சுஜிவன் விநோதினி தொடக்கி வைக்க, நிகழ்வில் கலந்து கொண்டோர் அனைவரும் சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தினர்.
அதன் பின்னர் கலை நிகழ்வுகள், நினைவுரைகள், தமிழீழ எழுச்சிப்பாடல்கள் என்பன இடம்பெற்றன.
முதல் நிகழ்வாக மாவீரர் வணக்க நடனத்தினை வலீஸ் மாநிலத்தின் கலைவாணி கலாலய ஆசிரியை திருமதி கீர்த்தனா ஆறுமுகம் அவர்கள் நெறிப்படுத்த மாணவிகளான ஆருத்திய ஜெயதீபன், ஏஞ்சல் ஓவியா நாராயண ஜோன், துசாளினி கோணேஸ், விஸ்ணுவர்சா பிரகாஸ், தன்வி ரகு, யஷ்மீரா கிருஷ்ணபிள்ளை ஆகியோர் வழங்கினர்.
"இராஜகோபுரம் எங்கள் தலைவர்" என்ற பாடலுக்கான எழுச்சி நடனத்தினை செல்வி துசாளினி கோணேஸ் வழங்கினார். இதனை ஆசிரியை திருமதி கீர்த்தனா ஆறுமுகம் அவர்கள் நெறியாள்கை செய்திருந்தார்.

ஆசிரியை திருமதி பிரியகலா பிரகாஷ் அவர்களின் நெறியாள்கையில் "விழியோரம் ஈரம்" என்ற பாடலிற்கான நடனத்தினை ஸ்ரீக்ஷேத்ரா நடனப்பள்ளி மாணவி செல்வி ஆரபி காந்திகுமார் வழங்கினார்.
நினைவெழுச்சி நாள் உரைகளை வெள்ளிநாதம் இதழின் ஆசிரியர் திரு. சிறி. இந்திரகுமார் மற்றும் போராளி திரு. சி. அறிவுமணி ஆகியோர் ஆற்றினர்.
துருவ அரசியலும் தலைவரின் தொலைநோக்கும் என்ற தலைப்பிலான வரலாற்றுக் குறிப்பு செல்வன் ஜெகமோகன் கலையகன் அவர்களால் வழங்கப்பட்டது.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் மேன்மை குறித்து விளக்கிய திரு. சிறி. இந்திரகுமார் அவர்கள் தனது உரையில், கடந்த  2025 ஆம் ஆண்டு தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வை மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம் நடாத்தியிருந்ததை நினைவு கூர்ந்ததுடன், அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டு இடம்பெறும் நினைவெழுச்சி நிகழ்வு நல்லதொரு முயற்சி என்பதனையும் குறிப்பிட்டு, இவ்வாறான நிகழ்வுகள் வருடாந்தம் பரவலாக முன்னெடுக்கப்படுவதனூடாகவே உண்மையான வரலாறு நிலைநாட்டப்படும் என்பதனையும் அதற்கான தேவையையும் விளக்கியிருந்தார்.
போராளி திரு. அறிவுமணி, தனது உரையில், தமிழீழ விடுதலைப் போராட்டம் எதிர்கொண்ட ஒவ்வொரு தடைகளின்போதும், அத்தடைகளைத் தலைவர் அவர்கள் எவ்வாறு வெற்றிகரமாகக் கடந்து போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருந்தார் என்பதனைச் சில நிகழ்வுகளுடன் விளக்கினார்.
நிகழ்வில், கவிதைகளை போராளி திருமதி பூங்குழலி, செல்வி செந்திலழகன் ஆரணி, 
தமிழ்பொழில் அறிவகம் தமிழ்ப்பள்ளி, பிறிபூர்க் மானில மாணவன் செல்வன் சிவநாதன் அருணன் ஆகியோர் வழங்கினர்.
தலைவர் அவர்களின் வரலாறு அடங்கிய காணொளியும் திரையில் காண்பிக்கப்பட்டது.
இசையமைப்பாளர் சுகுமார் முகிலரசனின் பின்னணி இசையில் தமிழீழ எழுச்சிப் பாடல்களைப் பாடகர்கள் சந்திரமோகன், ஜெசீந்திரன், சுலக்சன் அன்ரனி, தமிழிசை கலைச்செழியன், ஆர். என். நாதன், ஆதிரை வவிதரன், தினுஜா முகிலரசன் ஆகியோர் பாடிச் சிறப்பித்தனர். இசைக்கலைஞர்களாக நிலுஜா ராஜ்குமார், அஷ்விகா ராஜ்குமார் வைஷ்ணவி சிவகரன், ஓவியன் பகவத்சிங், ஆதவன் சிவநேசன், வைசு வசீகரன், டிவித் முகிலரசன், பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்திருந்த சுமன் ஆகியோர் பணியாற்றினர்.
இறுதியாக,  "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்" என்ற பாடல் பாடப்பட்டதைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடி இறக்கலுடன் நிகழ்வுகள் மாலை 4.45 மணியளவில் நிறைவடைந்தன.
"நன்றி"

மேலும்...

Latest Videos