மேதகு. வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தினரின் ஊடகச் சந்திப்பிற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு...

Total Views : 97
Zoom In Zoom Out Read Later Print

ஊடகவியலாளர்/ ஊடக நிறுவனம்.


26.05.2025


நேரடி ஊடகச் சந்திப்பிற்கான அழைப்பு


அன்புடையீர்,

மேதகு. வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தினராகிய நாம், எதிர்வரும் யூன் மாதம் 15 ஆம் நாள் ஏற்பாடு செய்துள்ள ஊடகச் சந்திப்பில் தங்களை நேரில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நோக்கம்:- தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த நிகழ்வாக சுவிற்சர்லாந்து நாட்டிலும் வேறு சில நாடுகளிலும் எதிர்வரும் 02.08.2025 அன்று முன்னெடுக்கப்படவுள்ள நிலையில்,
மேற்படி நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்கள், தெளிவுபடுத்தல்களை வழங்கும் பிரதான நோக்கில் இச்சந்நிப்பு ஏற்பாடாகியுள்ளது.

அதேவேளை, சந்திப்பில் கலந்து கொள்ளும் ஊடகவியலாளர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களிற்கும் நேரடியாக பதில்களை வழங்கும் வகையிலும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

சந்திப்பு விபரம்:- 
நாள்: 15.06.2025, ஞாயிற்றுக் கிழமை.
நேரம்: முற்பகல் 10.15 மணி.
இடம்: சுவிற்சர்லாந்து, ஆர்காவ் (Aargau) மாநிலம்.
முகவரி: Holzrütistrasse 2, 5443 Niederrohrdorf 
(Coop விற்பனை நிலையத்திற்கு எதிரே உள்ள நீலக்கோட்டு ஊர்தித் தரிப்பிடம்)

சமூக வாழ்வியல் தளத்தில் தொன்று தொட்டு தகவல்களை மக்களுக்கு விரைவாக நேர்த்தியுடன் பகிர்வதற்கு ஊடகங்களின் பங்கு பிரதானமானது என்ற வகையில்,
இந்த வரலாற்று நிகழ்விற்கான கருத்துருவாக்கத்திற்கும் தெளிவுபடுத்தல்களிற்கும் தங்களின் பேராதரவை வேண்டிநிற்கிறோம்.

தொடர்புகளுக்கு:- 
புலனம் (WhatsApp) எண்: 0041779100778
மின்னஞ்சல்: itwingmethagu@gmail.com 

முக்கிய கவனத்திற்கு: ஊடகச் சந்திப்பில் கலந்து கொள்வோர் தங்களின் விபரங்களை மேற்படி புலனம் (WhatsApp) எண்ணினூடாக எமக்கு அனுப்பி உங்களின் வரவினை பதிவு செய்வதனூடாக,
உங்களுக்கான உள்நுழைவு அனுமதியினை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம். 

"நன்றி"

சி. அறிவுமணி
இணைப்பாளர்,ஊடகப்பிரிவு
மேதகு. வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவம்.

மேலும்...

அன்மைய பதிவேற்றல்...